welcome to my blog

புதன், 5 டிசம்பர், 2012

பிரியாது .......அழியாது......

கடலை விட்டு அலை பிரிந்தாலும் 
வானை விட்டு நிலா பிரிந்தாலும் 
ஓவியத்தை விட்டு கோடுகள்  பிரிந்தாலும் 
பூவை விட்டு மணம்  பிரிந்தாலும் 
என்றுமே பிரியாது உன்னுடன் நான் கொண்ட உறவு......!

நீரோடை இல் பட்டுத்தெறிக்கும் சூரிய ஒளி போல 
மலை மேல் படரும் பனிச்சாரல் போல 
விண்ணை முட்டும் மேக கூடங்கள் போல 
காற்றை கிழிக்கும் வான் பறவை சிறகு போல 
என்றுமே அழியாது தத்தளிக்கும் உன் நினைவுகள் .......என் மனதில்......!

(  2002 இல் எழுதப்பட்டது  ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக